/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'புதுச்சேரியில் 2 தொகுதிகளை கேட்போம்' புதிய நீதிக்கட்சி தலைவர் பேட்டி
/
'புதுச்சேரியில் 2 தொகுதிகளை கேட்போம்' புதிய நீதிக்கட்சி தலைவர் பேட்டி
'புதுச்சேரியில் 2 தொகுதிகளை கேட்போம்' புதிய நீதிக்கட்சி தலைவர் பேட்டி
'புதுச்சேரியில் 2 தொகுதிகளை கேட்போம்' புதிய நீதிக்கட்சி தலைவர் பேட்டி
ADDED : ஜூன் 16, 2025 12:47 AM
புதுச்சேரி : வரும் சட்டசபை தேர்தலில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 2 தொகுதியை கேட்போம் என, புதிய நீதி கட்சித் தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து வருகிறது. ஆமதாபாத் விமான விபத்து குறித்து மத்திய அரசு குழு அமைத்து, விசாரணை நடத்தி வருகிறது. ஆய்வு செய்து தவறு இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து விமானங்களையும் சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரியில் புதிய நீதி கட்சியின் மாநில அமைப்பாளராக தேவநாதன் உள்ளிட்ட புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் வரும் தேர்தலில் புதுச்சேரியில் 2 இடங்கள் கேட்போம். குறைந்தது ஒரு இடத்திலாவது கண்டிப்பாக போட்டியிடும். தமிழகத்தில் ஒரு லோக்சபா தொகுதி உட்பட 6 தொகுதிகளை கேட்போம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவர் பழனிசாமி தான்.வரும் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பிரகாசமாக உள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். விஜய் கூட்டணிக்கு வருவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்.
வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இந்தியாவிலேயே பாராட்டக்கூடிய வகையில் முதல்வர் ரங்கசாமி, எளிமையான ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, புதுச்சேரியிலும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி தான் மீண்டும் அமையும்' என்றார்.