குப்பை வரியை ரத்து செய்யாத அரசை வீட்டிற்கு அனுப்புவோம்; சாமிநாதன்
குப்பை வரியை ரத்து செய்யாத அரசை வீட்டிற்கு அனுப்புவோம்; சாமிநாதன்
ADDED : ஏப் 05, 2026 11:19 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை த.வெ.க., வேட்பாளர் சாமிநாதன் விசில் சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
நேற்று இ.சி.ஆர்.பகுதியில் ஓட்டு சேகரித்த அவரை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் வெற்றிப் பெற்றதும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.
வேட்பாளர் சாமிநாதன் பேசியதாவது:
புதுச்சேரி மக்களுக்கு பெரிய சுமையாக இருப்பது குப்பை வரி. இந்த வரியால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குப்பை வரியை ரத்து செய்யாத அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.
இளம் விதவைகள் கொண்ட மாநிலத்தினை உருவாக்கிய பெருமை காங்., மற்றும் என்.ஆர்.காங்., அரசினை சாரும். இந்த மண்ணையும் மக்களையும் த.வெ.க.,வினால் மட்டுமே மீட்டெடுக்க முடியும். ஊழல் இல்லாத அரசு புதுச்சேரியில் அமைய த.வெ.க., விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்க மக்கள் தயாராகிவிட்டனர்' என்றார்.
