ADDED : மார் 21, 2026 05:21 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கி, திருவள் ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் 100 சதவீதம் ஓட்டு அளிப்போம் என, உறுதிமொழி ஏற்றனர்.
இதில், சங்கத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன், அருள்ராஜ், மனோகர், செந்தில், சம்பத், நுாலகர் ராஜேந்திரன், ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
