/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவோம்: அங்காளன் எம்.எல்.ஏ.,

ADDED : டிச 22, 2024 06:58 AM
புதுச்சேரி : சபாநாயகர் செல்வம் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும் என பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் செல்வம் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி, சட்டசபை செயலரிடம் நேற்று முன்தினம் மனு கொடுத்த பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் மற்றும் அமைச் சர்கள் செய்ய வேண்டிய வேலைகளை சபாநாயகர் செய்கிறார். எம்.எல்.ஏ.,க் களின் பணிகளில் சபாநாயகர் தலையிடுவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை.
அதனால், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளேன்.
இந்த தீர்மானத்தில் மேலும், சில எம்எல்.ஏ.,க் கள் கையெழுத்திட்டு, சட்டசபை செயலரிடம் கடிதம் கொடுக்க உள்ளனர். சபாநாயகருக்கு எதிரான இந்த தீர்மானத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.