/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவருக்கு வலை
/
பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவருக்கு வலை
பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவருக்கு வலை
பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவருக்கு வலை
ADDED : பிப் 22, 2024 11:43 PM
புதுச்சேரி: பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த 30 வயது வாலிபர். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் நடந்து 20 நாட்கள் ஆகிறது. இந்நிலையில், இவரது மனைவி பேஸ் புக், டி.பி.,யில் இருந்த புகைப்படத்தை மார்பிங் செய்துள்ளனர். பின்னர் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பேஸ்புக், இன்ஸ்டா கிராம் ஆகிய சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து, பெண்ணின் கணவர் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, பேஸ் புக், இன்ஸ்ட்ராகிராம் கணக்கு யார் பெயரில் உள்ளது என போலீசார் விசாரித்தனர்.
ஆனால் அந்த பேஸ் புக், இன்ஸ்டாகிராம் கணக்கு போலியான விலாசத்தில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.