ADDED : ஏப் 21, 2026 06:14 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: நாணமேடு சொர்ணா பைரவர் கோவிலில் நடந்த திருக்கல்யாணம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்கு, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், 19ம் ஆண்டு விழாவையொட்டி, சொர்ணா கர்ஷன பைரவருக்கும், சொர்ணா பைரவிக்கும் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
அதனை தொடர்ந்து, மூலவர் பைரவர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
