தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டாபிராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பட்டாபிராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பட்டாபிராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : மே 11, 2025 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 04:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் சுவாமி கோவிலில், நாளை (12ம் தேதி) சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நடக்கிறது.

புதுச்சேரி - கடலுார் சாலை, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர், லட்சுமணன், சீதாபிராட்டி சமேத பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை (12ம் தேதி) சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற உள்ளது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் அன்னம், சிம்மம், அனுமன் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

பிரம்மோற்சவத்தின், 7ம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:30 மணிக்கு ஸ்ரீ தேவி, பூமி தேவி சமேத சாரங்கபாணி பெருமாள் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை (12ம் தேதி) காலை 7.00 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us