ADDED : ஏப் 16, 2026 11:08 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: இடையார்பாளையம் சொர்ணா பைரவர் கோவிலில், வரும் 20ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.
அரியாங்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்கு, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவிலில் 19ம் ஆண்டு விழாவையொட்டி, வரும் 20ம் தேதி, மாலை 6:00 மணிக்கு சொர்ணா கர்ஷன பைரவருக்கும், சொர்ணா பைரவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவர் பைரவர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
