தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : செப் 08, 2025 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2025 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில் 6ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 6ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதையொட்டி, காலை விஷ்வக்சேன ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்ஷண ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடந்தது.

முக்கிய நிகழ்வாக, மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சர்வ பூஷன அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதில், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு திருக்கல்யாண பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us