ADDED : அக் 29, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நாவற்குளம் செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
வானுார் அடுத்த நாவற்குளம் பாலவிநாயகர், பாலமுருகன், வள்ளி தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 5ம் ஆண்டு திருக்கல்யாண விழாவையொட்டி, நேற்று காலை முருகன் சுவாமிக்கு அபிேஷகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
மாலை திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

