/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு வாய்க்காலை துார் வார வலியுறுத்தல்
/
உப்பனாறு வாய்க்காலை துார் வார வலியுறுத்தல்
ADDED : செப் 13, 2025 07:04 AM
புதுச்சேரி : உப்பனாறு வாய்க்காலை துார் வாரும் பணியினை மேற்கொள்ள புதுச்சேரி மாநில மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் தலைவர் பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
கவர்னர், முதல்வர், பொதுப்ணித்துறை அமைச்சருக்கு அவர் அளித்த மனு :
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மத்திய பிரதேசம், மும்பை, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இயல்பை விட 300 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
எனவே, உப்பனாறு வாய்க்கால் துார்வாரப்படாமல் இருந்ததால், கடந்தாண்டு பெய்த கன மழை காரணமாக மழை நீர் வெளியேற வழியில்லாமல் நகரப்பகுதிக்குள் புகுந்தது.
உப்பனாறு பாலம் வேலை தற்போது நடப்பதால், தண்ணீர் ஓடும் பாதை தற்காலிகமாக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழை நீர், கழிவு நீர் அதன் பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சித்தன்குடி வழியாக வரும் உப்பனாறு வாய்க்கால், ஜீவா நகர் செல்லும் பாலத்தின் சுவர்கள், இரு கரைகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை உடனே சரி செய்ய வேண்டும். வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து நிர்வழிப்பாதைகளையும் போர்க்கால அடிப்படையில் துார் வாரி, ஆழப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.