/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மறைமலையடிகள் சாலை சென்டர் மீடியனில் வரவேற்பு பேனர்
/
மறைமலையடிகள் சாலை சென்டர் மீடியனில் வரவேற்பு பேனர்
மறைமலையடிகள் சாலை சென்டர் மீடியனில் வரவேற்பு பேனர்
மறைமலையடிகள் சாலை சென்டர் மீடியனில் வரவேற்பு பேனர்
ADDED : ஜன 21, 2025 06:29 AM

திருமண கோஷ்டிகள் அட்டகாசம்
புதுச்சேரி: மறைமலையடிகள் சாலை சென்டர் மீடியனில் திருமண கோஷ்டிகள் போக்குவரத்திற்கு இடையூறாக 30 வரவேற்பு பேனர் வைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்படும் பேனர் கலாச்சாரம், நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் கூட பேனர் வைக்க தயக்கம் காட்டி வரும் நிலையில், திருமண கோஷ்டிகள் சகட்டுமேனிக்கு போக்குவரத்திற்கு இடையூறாக சென்டர் மீடியன்களில் பேனர் வைக்கும் புது கலாச்சாரத்தை துவக்கி உள்ளனர்.
ஆட்டுப்பட்டி அந்தோணியர் மகாலில் நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தரும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் வரவேற்று, இந்திரா சிக்னலில் துவங்கி நெல்லித்தோப்பு, மறைமலையடிகள் சாலை, வெங்கடசுப்பா ரெட்டியார்சிலை, உருளையன்பேட்டை போலீஸ் நிலையம் எதிரிலும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலை சென்டர் மீடியன்களில் வரிசையாக 30க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர் வைத்திருந்தனர்.
சென்டர் மீடியன் மின் கம்பங்களில் கட்டியிருந்த பேனர்கள் சாலையில் நீட்டிக் கொண்டிருந்ததால், வாகனங்கள் பேனரில் மோதி சிறுசிறு விபத்தில் சிக்கியதுடன், பலரது உடைகள் கிழிந்தது. இவை அனைத்தும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையம், சீனியர் எஸ்.பி., அலுவலகம் எதிரிலே நடந்தது.
ஆனால் போலீசார் பேனர் வைக்கப்பட்டது குறித்து துளியும் கவலைப்படவில்லை.
சென்னையில் கடந்த 2019 ம் ஆண்டு அ.தி.மு.க.வினர் வைத்த திருமண வரவேற்பு பேனர் காற்றில் பறந்து விழுந்ததில், ஸ்கூட்டரில் வந்த சுபஸ்ரீ என்ற மாணவி கிழே விழுந்தார். பின்னால் வந்த லாரி ஏறியதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் புதுச்சேரியில் நடைபெறாமல் இருக்க, சென்டர் மீடியன்களில் குறிப்பாக போலீஸ் நிலையம் எதிரில், திருமண கோஷ்டிகள் வைக்கும் பேனர்களை உடனடியாக அகற்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.