/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா கல்லுாரி மாணவர்களுக்கு வரவேற்பு
/
வெங்கடேஸ்வரா கல்லுாரி மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : அக் 30, 2024 04:33 AM

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
மருத்துவ கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களை வரவேற்று பேசினார்.
வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் நிறுவனர் ராதாராமச்சந்திரன் முன்னிலை வகித்து குத்துவிளக்கி துவக்கி வைத்தார். முன்னதாக கல்வி குழும இயக்குனர் ரத்தினசாமி வரவேற்றார்.
விழாவில் மருத்துவ கல்லுாரி டீன் பாப்பாதாசரி, கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வாக்டர் வித்யா, பொதுமேலாளர் சவுந்தரராஜன், மருத்துவ கண்காணிப்பாளர் லோகநாதன் ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள்,ஊழியர்கள் பங்கேற்றனர். மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் வினோத் நன்றி கூறினார்.