/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வளு துாக்கும் வீரருக்கு வரவேற்பு
/
வளு துாக்கும் வீரருக்கு வரவேற்பு
ADDED : ஜன 29, 2026 05:45 AM

திருபுவனை: டில்லியில் குடியரசு தினத்தையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரி வளு துாக்கும் வீரர் மற்றும் அவரது பயிற்சியாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வளு துாக்கும் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி மாணவர் விஷால் மற்றும் அவரது பயிற்சியாளர் பாக்கியராஜ் ஆகியோருக்கு குடிரசு தின விழாவையொட்டி, டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி விஷால் மற்றும் அவரது பயிற்சியாளர் பாக்கியராஜ் ஆகியோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
வளு துாக்கும் போட்டியில் சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவர் விஷால் மற்றும் அவரது பயிற்சியாளர் பாக்கியராஜ் ஆகியோரை ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டினார்.
டில்லியில் இருந்து திரும்பியவர்களுக்கு விஷாலின் சொந்த ஊரான மதகடிப்பட்டில் உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள், கல்லுாரி மாணவ - மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

