தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காமராஜ் நகர் தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளருக்கு வரவேற்பு

 காமராஜ் நகர் தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளருக்கு வரவேற்பு

 காமராஜ் நகர் தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளருக்கு வரவேற்பு


ADDED : ஏப் 02, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி ல.ஜ.க., வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று பாலாஜி நகர், ஜீவா நகரில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர், வீடு வீடாக சென்று பொது மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகள், குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தார்.

குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, வடிகால் பிரச்னைகள், தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதாக உறுதி அளித்தார்.

அவரை வரவேற்ற பெண்கள், மூதாட்டிகள் உள்ளிட்டோர் ஆரத்தி எடுத்தும், மலர் துாவி, ஆசீர்வாதம் வழங்கினர்.

பல இடங்களில் இளைஞர்கள் உற்சாக கோஷங்கள் எழுப்பி, அவருக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.

மேலும், கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய திட்டங்களை மக்களிடம் விளக்கி, “தர்பூசணி” சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மாலை ஜீவா நகர் பகுதியில் ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us