தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முட்டை தோசை சாப்பிட்ட வெல்டர் பலி 

முட்டை தோசை சாப்பிட்ட வெல்டர் பலி 

முட்டை தோசை சாப்பிட்ட வெல்டர் பலி 


UPDATED : ஆக 18, 2026 03:49 PM

ADDED : ஆக 18, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 03:49 PM ADDED : ஆக 18, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் முட்டை தோசை சாப்பிட்ட வெல்டர் மயங்கி விழுந்து இறந்தார்.

லாஸ்பேட்டை, சாமிபிள்ளைதோட்டம், லெனின் நகரைச் சேர்ந்தவர் பிரசாத், 36; வெல்டர். இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிரசாத் ஆகஸ்ட் 17 இரவு 9:45 மணிக்கு வீட்டில் முட்டை தோசை சாப்பிட்டு படுக்க சென்றார். பின், சிறிது நேரம் கழித்து, பிரசாத் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியபடி மயங்கி விழுத்தார்.

இதையடுத்து, மனைவி லதா மற்றும் உறவினர்கள் பிரசாத்தை மீட்டு ஆட்டோ மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பிரசாத்தை பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து லதா அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us