தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் மீது பஸ் மோதல் வெல்டர் பலி

பைக் மீது பஸ் மோதல் வெல்டர் பலி

பைக் மீது பஸ் மோதல் வெல்டர் பலி


ADDED : மார் 20, 2025 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பைக் மீது பஸ் மோதிய விபத்தில் வெல்டர் இறந்தார்.

முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம் மாதா கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுகானந்தம், 45;

வெல்டர். இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் பாலபாஸ்கரன் 41;என்பவருடன் சொந்த வேலையாக நேற்று முன்தினம் கடலுார் சென்றனர்.

மாலை 5:00 மணியளவில், இருவரும் யமஹா பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

பைக்கை, பாலபாஸ்கரன் ஓட்டினார். புதுச்சேரி - கடலுார் சாலை நோணாங்குப்பம் அருகே சென்ற போது, அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ், முந்தி செல்ல முயன்றது.

அப்போது, எதிர்பாராத விதமாக பஸ், பைக் மீது உரசியது. இதில், பாலபாஸ்கரன் பைக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற மற்றொரு பைக் மீது மோதி, சாலையில் விழுந்தனர். இதில், படுகாயமடைந்த இருவரையும், பொது மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு, டாக்டர் பரிசோதித்ததில், சுகாநந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். பாலபாஸ்கரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்துரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us