ADDED : ஆக 23, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வெல்டர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 71; வெல்டர். இவரது மகன் சிறுவயதில் இருந்தே இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக அவரை தினமும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். மகனின் இந்த நிலையை பார்த்து வேதனைடந்து வந்த பழனியப்பன் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேபிள் ஒயரால் துாக்கிக்கொண்டார். அப்போது வந்த அவரது மனைவி விஜயலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
