தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட  உதவி வழங்கல்

நலத்திட்ட  உதவி வழங்கல்

நலத்திட்ட  உதவி வழங்கல்


ADDED : பிப் 21, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.

அதில், திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு தலா 1 லட்சம் வீதம் 14 லட்சம், மருத்துவ உதவித் தொகை திட்டத்தில், 14 நபர்களுக்கு தலா 15 ஆயிரம் வீதம் 2.10 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ், 8 பேருக்கு தலா 13 ஆயிரம் வீதம் 1.04 லட்சம் என, மொத்தம், 17 லட்சம் நிதியுதவிக்கான அரசாணையை சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார். மணவெளி தொகுதி பா.ஜ., தலைவர் லட்சுமிகாந்தன் கிருஷ்ண மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானசேகர், தட்சிணாமூர்த்திஉட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us