/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிகள் : தி.மு.க., வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள் : தி.மு.க., வழங்கல்
ADDED : நவ 27, 2025 04:37 AM

புதுச்சேரி: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொக்குபார்க் சந்திப்பில் நடந்தது.
மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்திஷ் தலைமை தாங்கினார். தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால் , கார்த்திகேயன், தொகுதி அவைத் தலைவர் கணேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் இளம்பருதி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நலத்திட்ட உதவியாக 6 பேருக்கு தள்ளுவண்டி, 15 பேருக்கு தையல் எந்திரம், 10 பேருக்கு காது கேட்கும் கருவி, 500 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் நன்றி கூறி னார்.

