sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காரைக்காலில் நலத்திட்ட உதவிகள்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கல்

/

 காரைக்காலில் நலத்திட்ட உதவிகள்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கல்

 காரைக்காலில் நலத்திட்ட உதவிகள்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கல்

 காரைக்காலில் நலத்திட்ட உதவிகள்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கல்


ADDED : பிப் 16, 2026 06:59 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காரைக்கால் தெற்கு தொகுதி, கலையங்கட்டி மதகு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட கலையங்கட்டி மதகு, ஆற்றங்கரை ஓரத்தில் 65 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, புகார் வந்தது.

இதையடுத்து, காரைக்கால் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் பாசித் ஏற்பாட்டில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின், அவர், கூறுகையில், 'எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிக்க மட்டும் வராமல் மக்களின் வாழ்வாதாரத்தை தெரிந்து அவர்களின் நலத்திட்ட பணிகளை செய்து கொடுக்க வேண்டும். இங்கு வசிக்கும் மக்களுக்கு நீண்ட காலமாக பட்டா இல்லாமல் இருக்கின்றனர்.

ஆற்றங்கரை ஓரத்தில் இருப்பதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே தொகுதியின் எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us