/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க., வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க., வழங்கல்
ADDED : அக் 14, 2025 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதி சுப்பையா நகரில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 4ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
அதில், அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு பூஜையில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில், கிழக்கு வார்டு செயலாளர் ஜெயக்குமார், தொகுதி செயலாளர் ராஜா, மாநில துணை செயலாளர் கணேசன், துணை செயலாளர் சிவா, ஜெ., பேரவை துணைச் செயலாளர் ஜீவா, பாலு, சரவணன், அன்பு மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.