/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிகள் மகளிர் காங்., வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள் மகளிர் காங்., வழங்கல்
ADDED : ஜூலை 12, 2025 03:18 AM

புதுச்சேரி:புதுச்சேரி மத்திய மாவட்ட மகளிர் காங்., தலைவி ஜெயமேரி ஏற்பாட்டில் மகளிர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, மாநில மகளிர் காங்., தலைவி நிஷா தலைமை தாங்கினார். மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மத்திய மாவட்ட தலைவர் கோபி, முதலியார்பேட்டை வட்டார காங்., தலைவர் ஜெகன் மற்றும் திருமலை உள்ளிட்ட மகளிர் காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவில், பெண்களுக்கு 33 சதவீத இட ஓதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி மத்திய அரசுக்கு, மகளிர் காங்., மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.