/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 08, 2025 02:44 AM

புதுச்சேரி: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு, உழவர்கரை தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜ., மாநில துணை தலைவர் சரவணன் ஏற்பாட்டில் நடந்தது.
முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்து, தொகுதியில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு தள்ளுவண்டி, பங்க்கடை, மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், பெண்களுக்கு சேலைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சக்கர தள்ளுவண்டிகள், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரிப் பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.