sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவி முறைகேடு விவகாரம்; சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்

நலத்திட்ட உதவி முறைகேடு விவகாரம்; சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்

நலத்திட்ட உதவி முறைகேடு விவகாரம்; சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்


ADDED : ஏப் 11, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 11:58 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; நலத்திட்ட உதவிகள் முறைகேடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

அவர், கூறியதாவது: புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய்த் துறை, மீனவர் நலத்துறை உள்ளிட்ட நலத்திட்ட உதவிக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் யு.டி.சி.,யாக பணிபுரிந்த நபர் ரூ.65 லட்சத்துக்கு மேல் மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.

முறைகேட்டை தடுக்க தவறிய அனைத்து அதிகாரிகளும் குற்றவாளிகள் தான் என்பதை அரசு உணராமல், தனி நபர் மீது வழக்கு பதிந்து, முறைகேட்டை மூடி மறைக்கிறது.

முறைகேட்டில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ஜிம் அமைத்துக் கொள்ள மதிப்பீட்டு குழு தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த நாஜிம் அரசிடம் பரிந்துரை செய்துள்ளார். இன்று ஜிம் அமைத்துக் கொள்பவர்கள், நாளை ஸ்பா அமைக்கவும் கோரிக்கை வைப்பார்' என்றார்.

பேட்டியின் போது மாநில இணைச்செயலாளர் திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us