/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசு என்ன கொடுக்கவில்லை? முதல்வர் ரங்கசாமி கேள்வி
/
மத்திய அரசு என்ன கொடுக்கவில்லை? முதல்வர் ரங்கசாமி கேள்வி
மத்திய அரசு என்ன கொடுக்கவில்லை? முதல்வர் ரங்கசாமி கேள்வி
மத்திய அரசு என்ன கொடுக்கவில்லை? முதல்வர் ரங்கசாமி கேள்வி
ADDED : பிப் 15, 2025 06:07 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு மத்திய அரசின் உதவியோடு பல திட்டங்களை செய்து வருகிறது என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
ஆயுஷ்மான் பாரத் வே வந்தனா திட்டம் துவக்க விழாவில் அவர், பேசியதாவது:
பிரதமர் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கான திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள். ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இருந்தது.
இந்த குறையை போக்கும் வகையில் வயது முதிர்ந்தவர்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனைவருக்கும் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மத்திய அரசின் உதவியோடு பல திட்டங்களை செய்து வருகிறது. மத்திய அரசு என்ன கொடுக்கிறது என்று சிலர் கேட்பர். மத்திய அரசு என்ன கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் ஒரு ரோடு கூட போடவில்லை. தற்போது அனைத்து தொகுதிகளிலும் பல கோடி செலவில் உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு செல்லாத வகையில் புதுச்சேரியிலேயே சிறப்பு மருத்துவர்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அரசு மூலம் இதுவரையில் 350 பேருக்கு மேல் இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் துவங்கப்பட்டுள்ளது.
அதற்காக, மருத்துவ கல்லுாரியில் 13 அறுவை சிகிச்சை கூடம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
இதற்கெல்லாம் மத்திய அரசின் உதவி அவசியம். கவர்னரும் மத்திய அரசிடம் பேசி வருகிறார். அவருடன் நெருக்கமானவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கின்றனர். அவர்களை தொடர்பு கொண்டு தேவையான நிதியை பெற அக்கறை கொண்டுள்ளார்.
புதுச்சேரிக்கு பெரிய முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது கவர்னரின் எண்ணம். அதன் அடிப்படையில் சிறந்த மாநிலமாக புதுச்சேரியை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.