தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் சம்பளம் எப்போது?

தேர்தல் சம்பளம் எப்போது?

தேர்தல் சம்பளம் எப்போது?


ADDED : நவ 17, 2024 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லோக்சபா தேர்தல் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, ஏப்., 19 ம் தேதி நடந்தது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் எம்.டி.எஸ்., எல்.டி.சி., யு.டி.சி., ஆசிரியர்கள் என பல துறை ஊழியர்கள் பணியாற்றினர். தேர்தல் பணி செய்த அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 15 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்டம் ஒழுங்கு, ஊர்காவல் படை, ஐ.ஆர்.பி.என். உள்ளிட்டோருக்கு இதுவரை தேர்தல் ஊக்க தொகை வழங்கப்படவில்லை. இதுபோல் 2 ஆண்டிற்கான சீருடைக்கான நிலுவை பணம் லோக்சபா தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. சீறுடைக்கான நிலுவை தொகை, தேர்தல் ஊக்க தொகை எப்போது வழங்குவீர்கள் என போலீசார் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us