/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் கிராமமான செட்டிப்பட்டில் விளையாட்டு மைதானம் அமைவது எப்போது? அமைச்சரின் அறிவிப்பு நிறைவேற்றப்படுமா?
/
போலீஸ் கிராமமான செட்டிப்பட்டில் விளையாட்டு மைதானம் அமைவது எப்போது? அமைச்சரின் அறிவிப்பு நிறைவேற்றப்படுமா?
போலீஸ் கிராமமான செட்டிப்பட்டில் விளையாட்டு மைதானம் அமைவது எப்போது? அமைச்சரின் அறிவிப்பு நிறைவேற்றப்படுமா?
போலீஸ் கிராமமான செட்டிப்பட்டில் விளையாட்டு மைதானம் அமைவது எப்போது? அமைச்சரின் அறிவிப்பு நிறைவேற்றப்படுமா?
ADDED : செப் 19, 2024 02:03 AM
புதுச்சேரி: போலீஸ் கிராமம் செட்டிப்பட்டில் அமைச்சர் அறிவித்தப்படி விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், போலீசார், சிறை வார்டன், தீயணைப்பு துறையினர், ஐ.ஆர்.பி.என், ஊர்காவல் படை வீரர்கள், தமிழ்நாடு போலீஸ் என பல்வேறு சீருடைப் பணியாளர் துறைகளில் ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக, செட்டிப்பட்டு போலீஸ் கிராமம் என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த போலீஸ் பணிக்கான தேர்வில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 8 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கடந்தாண்டு 2023ம் ஆண்டு நடந்த போலீஸ் பணிக்கான தேர்வில் இரண்டு பெண்கள் உட்பட 11 பேரும், சமீபத்தில் நடந்த ஊர்காவல் படை வீரர்கள் தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று, செட்டிப்பட்டு கிராமம் மீண்டும் போலீஸ் கிராமம் என்ற பெயரை உறுதிப்படுத்தியது.
ஆனால், இக்கிராமத்தில் அதிகப்படியான அரசின் சீருடை பணியாளர் துறைகளில் தேர்வாகிய நிலையில், உடற்தகுதியை வளர்த்து கொள்ளும் வகையில் போதிய விளையாட்டு மைதானம் இல்லை.
இதன் காரணமாக, இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் அருகிலுள்ள தமிழகப் பகுதியான திருவக்கரை, செங்கமேடு உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு சென்று, அங்கு சிறிய மைதானத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு பயிற்சி பெறும் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதையடுத்து, செட்டிப்பட்டு கிராமத்தில் இளைஞர்கள், பெண்கள் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், தொகுதி எம்.எல்.ஏ.,வும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நமச்சிவாயம் செட்டிப்பட்டு கிராமத்தில், இளைஞர்கள் உடற்தகுதியை மேம்படுத்தி கொள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார்.
ஆனால், அதற்கான எந்தவித பணிகளை அதிகாரிகள் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.
ஆகையால், அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தப்படி போலீஸ் கிராமமான செட்டிப்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானத்தை விரைவில் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இளைஞர்கள் மீண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

