ADDED : ஏப் 16, 2026 11:09 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அடையாளம் தெரியாத வாகன மோதி, இறந்த முதியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி டி.நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகில், கடந்த 11ம் தேதி, அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் படுகாயமடைந்தார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இறந்தார். அவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, போக்குவரத்து வடக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
