/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜரை விமர்சித்த தி.மு.க.,வை காங்., கண்டிக்காதது ஏன்? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
/
காமராஜரை விமர்சித்த தி.மு.க.,வை காங்., கண்டிக்காதது ஏன்? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
காமராஜரை விமர்சித்த தி.மு.க.,வை காங்., கண்டிக்காதது ஏன்? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
காமராஜரை விமர்சித்த தி.மு.க.,வை காங்., கண்டிக்காதது ஏன்? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
ADDED : ஜூலை 18, 2025 04:38 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து குறித்து பேச காங்., கட்சிக்கு தகுதியில்லை என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர், கூறியதாவது:
மத்தியிலும், மாநிலத்திலும் காங்., கட்சி ஆட்சியில் இருந்தபோதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முன்வரவில்லை. மூன்று ஆண்டிற்கு முன் மத்திய அரசு இந்தியாவில் காஷ்மீர், லடாக் என்ற புதிதாக இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது. அதற்கு மாநில அந்தஸ்து வழங்க பாராளுமன்றத்தில் உரிய சட்டம் கொண்டுவர வேண்டும் என, காங்., கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், தற்போதைய தலைவர் கார்கே ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர்.
ஆனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, ராகுல் மற்றும் கார்கே ஆகியோர் பிரதமரை வலியுறுத்தாதது அவர்களின் சந்தர்ப்பவாத அரசிலை காட்டுகிறது. எனவே காங்., கட்சிக்கு புதுச்சேரியின் மாநில அந்தஸ்து பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காமராஜரை பற்றி திருச்சி சிவா பேசியது கண்டிக்கத்தக்கது. காமராஜரை வைத்து அரசியல் செய்யும் காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம் இருவரும், தி.மு.க.,வை கண்டித்தால் வரும் சட்டசபை தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என, வாய்மூடி மவுனம் காக்கின்றனர். காமராஜர் பற்றி தவறாக பேசிய திருச்சி சிவா கருத்தை அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது.
புதுச்சேரிக்கு வருகை தந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்த பா.ஜ., தலைவர்கள் மற்றும் என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.