/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு துறைகளின் அனுமதியில் தாமதம் ஏன்? உள்நாட்டு நீர்வழிகள் ஆணைய சேர்மன் கேள்வி
/
அரசு துறைகளின் அனுமதியில் தாமதம் ஏன்? உள்நாட்டு நீர்வழிகள் ஆணைய சேர்மன் கேள்வி
அரசு துறைகளின் அனுமதியில் தாமதம் ஏன்? உள்நாட்டு நீர்வழிகள் ஆணைய சேர்மன் கேள்வி
அரசு துறைகளின் அனுமதியில் தாமதம் ஏன்? உள்நாட்டு நீர்வழிகள் ஆணைய சேர்மன் கேள்வி
ADDED : மார் 20, 2025 04:56 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவாக தொழில் துவங்குவதற்கான வழிமுறைகளை மத்திய அரசின் குழுவினர் புதுச்சேரி அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தனர்.
புதுச்சேரியில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்க சிவப்பு கம்பளம் விரித்து அரசு வரவேற்றாலும், தொழில் துவங்குவதற்காக அனுமதி அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதில்லை. வெறுத்துபோய் தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு ஓடிவிடுகின்றன.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு புகார்கள் சென்ற நிலையில், தலைமை செயலத்தில் தலைமை செயலர் சரத் சவுகான் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணைய சேர்மன் விஜய்குமார், கேபினட் செயலக இணை செயலர் நிலா மோகன், மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குநர் சபிஹா ரிஸ்வி உள்பட பல்வேறு மத்திய அரசு துறை அதிகாரிகள், புதுச்சேரி அரசு செயலர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணைய சேர்மன் விஜய்குமார் பேசியதாவது:
நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு விரைவாக அனுமதி தருவது அவசியம். புதுச்சேரியில் தொழில் துவங்குவதற்கான அனுமதி ஏன் காலதாமதம் ஏற்படுகிறது. பிற மாநிலங்களில் உள்ள நடைமுறைகளையும், காலத்துகேற்ப வழிமுறைகளையும் செயல்படுத்த ஆலோசிக்க வேண்டும்.
உதாரணமாக டில்லியில் கடைகள் துவங்க உடனடியாக விண்ணப்பித்த அன்றைய தினமே அனுமதி கொடுக்கப்படுகிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் ஒவ்வொரு ஆண்டும் வாங்க தேவையில்லை. தமிழ்நாடு, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் உயரமான கட்டடத்திற்கு எல்லை இல்லை.
புதுச்சேரி மாநிலம் சிறிய மாநிலம். இங்கு இதுபோன்று உயரமான கட்டத்திற்கு அனுமதி கொடுக்கலாம். இதுபோன்ற வழிமுறைகளை கையாண்டு தொழில் துவங்க விரைவாக அனுமதியை தருவதை அரசு செயலர்கள், இயக்குநர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்தால் தான் எளிதாக அனுமதி கொடுக்க முடியும். அப்போது தான் விரைவான வளர்ச்சி சாத்தியம். இவ்வாறு அவர் பேசினார்.