தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாராயணசாமிக்கு 'சீட்' மறுத்தது ஏன்? மாஜி துணை சபாநாயகர் விளக்கம் 

 நாராயணசாமிக்கு 'சீட்' மறுத்தது ஏன்? மாஜி துணை சபாநாயகர் விளக்கம் 

 நாராயணசாமிக்கு 'சீட்' மறுத்தது ஏன்? மாஜி துணை சபாநாயகர் விளக்கம் 


ADDED : மார் 25, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு உயர் பதவி வழங்கவே தேர்தலில் போட்டியிட'சீட்' மறுக்கப்பட்டுள்ளதாக காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பாலன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;

புதுச்சேரி பா.ஜ., தலைவர் ராமலிங்கம், ராகுல் குழப்பவாதி என்றும், முன்னாள் முதல்வர் நாராயணசாமியை பா.ஜ., வில் சேர அழைப்பு விடுத்துள்ளார். மிகுந்த மன தைரியம் கொண்ட ராகுலை பற்றி பேசுவதற்கு, ராமலிங்கத்திற்கு தகுதி இல்லை. முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். 'சீட்' வழங்காததால் அவர் புறக்கணிக்கப்பட்டதாக ராமலிங்கம் கூறுவது அழகல்ல.

நாராயணசாமி புதுச்சேரியில் இருந்து டில்லி சென்று எந்தளவுக்கு உயர் பதவியை அடைந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ராமலிங்கம் குடும்பத்திற்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்ததே காங்., தான். ஆகவே நாராயணசாமிக்கு அறிவுரை கூறவோ, அழைக்கவோ ராமலிங்கத்திற்கு எவ்வித தகுதியும் இல்லை.

இண்டி கூட்டணியை பொறுத்தவரையில் எவ்வித குழப்பமும் இல்லை. குழப்பங்கள் அனைத்திற்கும் இன்று (26ம் தேதி) மாலைக்குள் பதில் கிடைத்துவிடும். நாராயணசாமிக்கு விரைவில் உயர் பதவி கிடைக்கும். அதனை கட்சி தலைமை முடிவு செய்யும். அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கவே சீட் கொடுக்காமல் கட்சி நிறுத்தியுள்ளது. புதுச்சேரியில் கண்டிப்பாக இண்டி கூட்டணி வெற்றி பெறும். காங்., தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us