தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி

 மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி

 மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி


ADDED : பிப் 14, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக் கை:

சட்டசபை கூட்டத்தில் முதல்வர் மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்கத் தயார் என, கூறியது வேடிக்கையாக உள்ளது. தேர்தலைப் புறக்கணிக்கத் தயாராக இருந்தால், அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். இவரை சந்திக்க மத்திய அமைச்சர்கள் வந்தபோது, மாநில அந்தஸ்து பற்றி வலியுறுத்தி இருக்கலாம்.

மாநில அந்தஸ்து கொடுத்தால் தான் பா.ஜ., உடன் கூட்டணி என்ற நிபந்தனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருக்கலாம்.

மாநில அந்தஸ்து கோரி, அறிக்கை தயாரித்து, எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரிடம் கோரி வைத்திருக்கலாம்.

உண்மையில் மாநில அந்தஸ்து வேண்டுமென்றால் பிரதமர் புதுச்சேரிக்கு வரும்போது மாநில அந்தஸ்து கொடுக்கும் வரை தேர்தலைப் புறக்கணிக்க மு டிவு செய்து இருக்கிறோம் என, தெரிவிக்க முடியுமா. இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள ரூ.5,396 கோடியும், சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல், குடும்பத் தலைவிக்கு நிதி உதவி, சிலிண்டருக்கான மானியம் போன்றவைக்கு மட்டுமே செலவிடப்படும்.

இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us