தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவன் தாக்கி காயமடைந்த மனைவி சாவு

கணவன் தாக்கி காயமடைந்த மனைவி சாவு

கணவன் தாக்கி காயமடைந்த மனைவி சாவு


ADDED : ஜூன் 21, 2025 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : குடும்ப பிரச்னையில் கணவர் தாக்கியதில், காயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், 59; மீன் வியாபாரி. இவரது மனைவி செல்வி, 50. இவரிடம் ஜெயராமன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

கடந்த 15ம் தேதி, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், செல்வியை, ஜெயராமன் தேங்காய் திருவும் மரக்கட்டையால், தலையில் தாக்கினார். அவரது மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, செல்வி ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

உடன் அவரை ஜிப்மரில் அனுமதித்தனர். அவரது மகன் சுமன், அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து வழக்கை தவளக்குப்பம் போலீசார், கொலை வழக்காக மாற்றம் செய்து, தலைமறைவாக உள்ள ஜெயராமனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us