/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
/
கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
ADDED : அக் 29, 2025 11:35 PM
காரைக்கால்: கணவர் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால் சேனியர் குளத்து வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 44; பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவர், கணவரை பிரிந்து வசித்து வந்த மகேஸ்வரி,42; என்பவரை திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் செந்தில்குமார், பிரியாணி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது சமையலறையில் இருந்த மகேஸ்வரி, செந்தில்குமாரிடம் நீ வேறு எந்த பெண்ணிடமாவது பேசுகிறயா என கேட்டார். அதற்கு செந்தில்குமார் இல்லை என்றதும், ஆத்திரமடைந்த மகேஸ்வரி தன் கையில் வைத்திருந்த மிளகாய் துாளை முகத்தில் வீசினார்.
அதில், செந்தில்குமார் துடித்த அதேவேளையில், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து செந்தில்குமார் முகத்தில் ஊற்றினார்.
அதில் படுகாயமடைந்து துடிதுடித்த செந்தில்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்கு பதிந்து மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

