ADDED : ஜூலை 25, 2025 02:38 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மனைவி கண்டித்ததால், கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உருளையன்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ரகு, 54, இவர், உழவர்கரை நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். தொடர்ந்து மது குடித்ததால், வலிப்பு, நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டார்.
இந்நிலையில், இவரது உறவினரின் திருமணத் திற்கு அழைக்கததால் அவர் மனஉளச்சலில் இருந்தார். அதனால், மீண்டும் மதுகுடிக்க ஆரம்பித்தார். அவரது மனைவி மது குடிக்க வேண்டாம் என கண்டித்தார். மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
