sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமா?

/

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமா?

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமா?

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமா?


ADDED : டிச 26, 2024 05:48 AM

Google News

ADDED : டிச 26, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிராமப்புற மாணவ - மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி எல்லைப்பகுதியான நெட்டப்பாக்கத்தில் கம்பன் அரசு மேல் நிலைப் பள்ளி அமைந் துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் இயற்கையான சூழலில் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்கு பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவிகள் காலை, மாலையில் விளையாட்டு, நடை மற்றும் ஓட்டப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இப்பள்ளி விளையாட்டு மைதானம் மையப்பகுதியாக இருக்கிறது.

ஆகையால் கிராமப்புற பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரவு நேர பயிற்சி மேற்கொள்ளும் வகையில் ஹைமாஸ் விளக்கும் மற்றும் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு நடடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us