/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா குறித்து தகவல் தெரிவிக்க மொபைல் எண் அறிவிக்கப்படுமா?
/
கஞ்சா குறித்து தகவல் தெரிவிக்க மொபைல் எண் அறிவிக்கப்படுமா?
கஞ்சா குறித்து தகவல் தெரிவிக்க மொபைல் எண் அறிவிக்கப்படுமா?
கஞ்சா குறித்து தகவல் தெரிவிக்க மொபைல் எண் அறிவிக்கப்படுமா?
ADDED : மார் 08, 2024 06:46 AM
நமது அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை ஒப்பிடும்போது, புதுச்சேரி சின்னஞ்சிறிய நில பகுதி. கூப்பிடும் துாரத்தில் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு போலீசார் எண்ணிக்கையும் அதிகம். விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டுமே ஒட்டுமொத்த மாவட்டத்தை கண்காணிக்கின்றனர். ஆனால் புதுச்சேரியில் டி.ஜி.பி, ஐ.ஜி., டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி.க்கள் என, 9 ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 4 பி.பி.எஸ்., அதிகாரிகள், 23 எஸ்.பி.,க்கள் உள்ளனர். இத்தனை அதிகாரிகள் இருந்தும் கஞ்சா விற்பனையை ஒழிக்க முடிவதில்லை.
தமிழக பகுதியில் எஸ்.பி.,யின் கீழ் இயங்கும் சிறப்பு அதிரடிப்படை கஞ்சா பறிமுதல் செய்தால், அந்த பகுதி சட்டம் ஒழுங்கு போலீசார் மீது சஸ்பென்ட், மெமோ, இடமாற்றம் உத்தரவு பறக்கும். இதனால் கஞ்சா விற்பனையை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை குறித்து எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் தெரிவிக்க, அவரது மொபைல் போன் நம்பர் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த நம்பரில் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும்.
புதுச்சேரியில் இதுபோன்று எந்த அதிகாரியும் தங்களின் மொபைல்போன் நம்பரை வெளியிட்டு தகவல் தெரிவிப்பது இல்லை. கஞ்சா விற்பனையை ஒழிக்க வழக்கு பதிவு செய்யும் அதிகாரத்துடன் கூடிய புதிய பிரிவு உருவாக்கி, அதற்கு தனி ஐ.பி.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும். பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தனி மொபைல் எண் அறிவிக்க வேண்டும்.

