/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி விளையாட்டு திடலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
/
அரசு பள்ளி விளையாட்டு திடலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
அரசு பள்ளி விளையாட்டு திடலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
அரசு பள்ளி விளையாட்டு திடலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
ADDED : ஜன 09, 2025 06:12 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள், பள்ளியில் உள்ள விளையாட்டு திடலில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இந்த விளையாட்டு திடலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு திடல் போதிய பாரமரிப்பின்றி உள்ளது. குறிப்பாக விளையாட்டு திடலில் சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் விளையாட்டு திடலில் நுழைந்து மது அருந்துவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி செல்கின்றனர்.
இதனால், விளையாட்டு திடலில் விளையாட செல்லும் பள்ளி, மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் விளையாட்டு திடலுக்கு சுற்று சுவர் அமைக்க அரசு நடவடக்கை எடுக்க வேண்டும்.

