/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டு, நல்லுார் ஏரிகளில் பறவைகள் வேட்டை தடுக்கப்படுமா?
/
மதகடிப்பட்டு, நல்லுார் ஏரிகளில் பறவைகள் வேட்டை தடுக்கப்படுமா?
மதகடிப்பட்டு, நல்லுார் ஏரிகளில் பறவைகள் வேட்டை தடுக்கப்படுமா?
மதகடிப்பட்டு, நல்லுார் ஏரிகளில் பறவைகள் வேட்டை தடுக்கப்படுமா?
ADDED : செப் 23, 2024 04:22 AM
புதுச்சேரி, : மதகடிப்பட்டு, நல்லுார் ஏரிகளில் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் இருந்து தெற்கே கடலுார், பண்ருட்டி, மடுகரை செல்லும் சாலையில் 5 கி.மீ., சதுர பரப்பளவில் மதகடிப்பட்டு ஏரி மற்றும் நல்லுாரி ஏரி அடுத்தடுத்து அமைந்துள்ளன. புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுடு ஏரிக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. அதேபோல், நலலுார் ஏரிக்கு கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன.
சமீபத்தில் பெய்த மழையால் நல்லுார் ஏரி நிரம்பி உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு ஏரிகளிலும் பறவைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. எனவே நல்லுார் மற்றும் மதகடிப்பட்டு ஏரிகளில் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.