/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'டில்லிக்கு வாங்க... பேசி தீர்த்து கொள்ளுவோம்' பா.ஜ., கோரிக்கையை ஏற்பாரா முதல்வர் ரங்கசாமி
/
'டில்லிக்கு வாங்க... பேசி தீர்த்து கொள்ளுவோம்' பா.ஜ., கோரிக்கையை ஏற்பாரா முதல்வர் ரங்கசாமி
'டில்லிக்கு வாங்க... பேசி தீர்த்து கொள்ளுவோம்' பா.ஜ., கோரிக்கையை ஏற்பாரா முதல்வர் ரங்கசாமி
'டில்லிக்கு வாங்க... பேசி தீர்த்து கொள்ளுவோம்' பா.ஜ., கோரிக்கையை ஏற்பாரா முதல்வர் ரங்கசாமி
ADDED : ஜூலை 11, 2025 04:05 AM
புதுச்சேரி:புதுச்சேரி சுகாதார துறை இயக்குநர் நியமனத்தில் கடும் அதிருப்தியில் இருந்த முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பா.ஜ., மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து பேசினார்.
1 மணி நேரம் வரை நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு ஒருவழியாக முதல்வர் ரங்கசாமி சமாதானமடைந்தார். எந்த நிர்வாகத்தில் அவ்வப்போது சிக்கல்கள் வரும் தான். அதனை அவ்வப்போது பேசி தீர்த்து கொள்ள வேண்டும். அதுபோல் தான் இப்போது சிக்கல்கள் தீர்க்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தல் வெற்றி குறித்தும் விவாதித்தோம். மீண்டும் ஆட்சி அமைப்போம் என, கடந்த மூன்று நாட்களாக நடந்த ராஜினாமா பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே சமரசம் ஏற்பட்டாலும் முதல்வருக்கு நிர்வாக ரீதியாக எந்த பிரச்னையும் இன்னும் தீரவில்லை. நிர்வாக விஷயங்களில் கவர்னர்-முதல்வர் இடையிலான மோதல் இன்னும் நீருபூத்த நெருப்பாகவே உள்ளது.
ரங்கசாமி எதிர்பார்க்கும் பல முக்கிய கோப்புகளுக்கு கவர்னரிடமிருந்து சமீபகாலமாக எந்த கிரீன் சிக்னலும் இல்லை. இதுவே ரங்கசாமியின் அதிருப்திக்கு முக்கிய காரணம். இதற்கு பல உதாரணங்களை பட்டியலிட்டு சொல்லாம்.
ஆட்சி முடிய இன்னும் 10 மாதமே உள்ளது. இதற்குள் அனைத்து நலத்திட்டங்களையும் செய்து முடித்து, இலவசங்களை அள்ளி வீசி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பதே ரங்கசாமியின் கணக்காக உள்ளது. ஆனால் கவர்னரின் கணக்கே வேறாக உள்ளது. மாநிலத்தில் போதிய நிதி இல்லாதபோது எப்படி இலவசங்களையும், நலத்திட்டங்களையும் தர முடியும்.
அதனால் முதலில் மாநில வருமானத்தை பெருக்குங்கள் என கவர்னர் அட்வைஸ் செய்தார். அதனால் தான் கேபினெட் கூடி கலால் வரியை அரசு உயர்த்தியது. ஆனாலும் இன்னும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதபோல் முதல்வர், மாநில வருவாயை பெருக்கவே புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிக்கப்பட்டது என்றார். இந்த கோப்பிற்கும் இன்னும் கவர்னர் அனுமதி தரவில்லை. வறுமை கோட்டில் உள்ள மகளிருக்கான உரிமம் தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்; மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ள மகளிருக்கு 1000 ரூபாய் உரிமத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கெல்லாம் எங்கே நிதி என கேள்வி எழுப்ப கவர்னர்-முதல்வர் இடையே உச்சக்கட்டமாக மோதல் வெடித்தது.
இந்த நேரத்தில் தான் தன்னுடைய துறையான சுகாதார துறையில் இயக்குநர் நியமன கோப்பிற்கு பரிந்துரை அனுப்ப, அதிலும் கவர்னர் தனி முடிவெடுத்து, அவருடைய அலுவலகத்திற்கு வராமல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனால் தான் அமைதியே உருவமான ரங்கசாமி கொந்தளித்துவிட்டார்.
இவை அனைத்தையும் சமாதானப்படுத்த வந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளரிடம் முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டார். முதல்வரின் கோபத்தை கண்ட பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர், கவர்னர் கைலாஷ்நாதன் முடிவுகள் மீது உங்களுடைய கருத்துகள் அனைத்தையும் பா.ஜ., மேலிடத்திற்கு தெரிவிக்கின்றேன். அனைத்தையும் பேசி தீர்க்க நீங்கள் டில்லிக்கு ஒருமுறை வாங்க அழைப்பு விடுத்தார்.
முதல்வர் டில்லி செல்வரா அல்லது வழக்கம்போல் இந்த வாய்ப்பையும் தவறவிடுவாரா என்று தெரியவில்லை.