/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?
/
அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?
அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?
அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : மே 28, 2025 11:44 PM
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிராமப்புற மாணவ - மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஹைமாஸ் விளக்கும் மற்றும் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏம்பலம் கிராமத்தில் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் இயற்கையான சூழலில் 2 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல கிராம மக்கள் காலை, மாலையில் விளையாட்டு, நடை, ஓட்டப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம், கோர்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் இப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இப்பள்ளி மைதானத்தில், கிராமப்புற பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கும் மற்றும் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு நடடிக்கை எடுக்க வேண்டும்.