தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இப்ப விழுமோ... எப்ப விழுமோ... கொரவள்ளிமேடு கிராமத்தில் திக்...திக்...

 இப்ப விழுமோ... எப்ப விழுமோ... கொரவள்ளிமேடு கிராமத்தில் திக்...திக்...

 இப்ப விழுமோ... எப்ப விழுமோ... கொரவள்ளிமேடு கிராமத்தில் திக்...திக்...


ADDED : ஜன 18, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் தொகுதி, கொரவள்ளிமேடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மாரியம்மன் கோவில் எதிரே, ஒரு வீட்டின் வாசலில் உள்ள மின் கம்பங்களில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மின் கம்பம் சேதமடைந்து, அதில் உள்ள சிமெண்ட காரைகள் பெயர்ந்து விழுந்து, எலும்பு கூடு போல் காட்சி அளிக்கிறது.

இதனால், அந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் மின் துறையில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த கம்பத்தின் அருகே புதியதாக வேறு ஒரு மின் கம்பம் நடப்பட்டது. தற்போது, 6 மாதங்கள் கடந்த விட்ட நிலையில், சேதமான மின் கம்பத்தில் உள்ள மின் உபகரணங்கள் புதிய மின் கம்பத்தில் மாற்றி அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.

சேதமான மின் கம்பத்தை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்துடன் சென்றுக் கொண்டுள்ளனர். விபரீதம் நிகழும் முன், சேதமான மின்கம்பத்தில் உள்ள இணைப்புகளை புதிய மின்கம்பத்தில், மாற்றி, பழைய கம்பத்தை அகற்றி ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us