/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலிதீர்த்தாள்குப்பம் அரசு கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
/
கலிதீர்த்தாள்குப்பம் அரசு கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
கலிதீர்த்தாள்குப்பம் அரசு கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
கலிதீர்த்தாள்குப்பம் அரசு கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
ADDED : அக் 24, 2024 06:11 AM

திருபுவனை: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து மாணர்வகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் காமராஜர் அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. முற்றிலும் கிராமப்புற மாணவ-மாணவிகள் பயின்று வரும் இக்கல்லுாரி வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது.
விளையாட்டு மைதானத்தில் மாணவ-மாணவிகள் பயிற்சிபெற ஏற்ற அடிப்படை வசதிகள் இன்றி, புல், பூண்டுகள், செடி, கொடிகள் முளைந்து முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் வட்டார அளவில் துவங்கி சர்வதேச அளவில் சாதனை படைத்த மாணவரும் இக்கல்லுாரியில் உள்ளனர்.
எனவே கல்லுாரியில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் கிரிக்கெட், கபடி, கைப்பந்து, கால்பந்து, நடை பயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சி, நீளம் தாண்டுதல், உயர் தாண்டுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தும் வகையில் வேண்டிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், பார்வையாளர் கேலரி அமைக்கவும் புதுச்சேரி அரசும், உயர்கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

