தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காலாப்பட்டு தொகுதியில் கல்யாணசுந்தரம் கரையேறுவாரா?

 காலாப்பட்டு தொகுதியில் கல்யாணசுந்தரம் கரையேறுவாரா?

 காலாப்பட்டு தொகுதியில் கல்யாணசுந்தரம் கரையேறுவாரா?


ADDED : மார் 26, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 08:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதியில் தி.மு.க., மற்றும் காங்., வேட்பாளர்கள் தனித்தனியே களம் இறங்கியுள்ளதால், பா.ஜ., வேட்பாளருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, காலாப்பட்டு சட்டசபை தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான பா.ஜ., கல்யாணசுந்தரம் போட்டியிடுகிறார். இண்டி கூட்டணி சார்பில் தி.மு.க.,வை சேர்ந்த செந்தில் (எ) ரமேஷ் போட்டியிடுகிறார். மேலும், இதே கூட்டணியை சேர்ந்த காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷாஜகான் மற்றும் த.வெ.க.,- பா.ம.க.,-நா.த.க., மற்றும் சுயேச்சை என மொத்தம் 7 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் பா.ஜ., கல்யாணசுந்தரம் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் இதே கூட்டணியில் போட்டியிட்டு 13,277 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தற்போதைய தி.மு.க., வேட்பாளர் செந்தில் (எ) ரமேஷ் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 9,768 ஓட்டுகள் பெற்று 2ம் இடத்தை பிடித்து தோல்வி அடைந்தார். மேலும், அந்த தேர்தலில் இத்தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முத்துவேல் 3,769 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த செந்தில், சோர்வடையாமல் தொகுதியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். மேலும், சமீபத்தில் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.,வில் இணைந்து இத்தேர்தலில் காலாப்பட்டு தொகுதியில் மீண்டும் களம் இறங்கியுள்ள செந்தில், இம்முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தோடு தேர்தல் பணியை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளார்.

மேலும், இத்தொகுதியில் கடந்த 2001 முதல் நான்கு தேர்தலில் போட்டியிட்டு, மூன்று முறை வெற்றி பெற்று அமைச்சராக கோலோச்சிய காங்., கட்சியை சேர்ந்த ஷாஜகான் மீண்டும் இத்தொகுதியில் இம்முறை களம் இறங்கியுள்ளதால், தொகுதியில் தேர்தல் களம் ஆரம்பமே அனல் பறக்கத் துவங்கியுள்ளது.

இத்தொகுதியில் தனத்து போட்டியிடும் இண்டி கூட்டணியை சேர்ந்த தி.மு.க., மற்றும் காங்., வேட்பாளர்கள் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

தி.மு.க., மற்றும் காங்., வேட்பாளர்களின் அசூர வேக தேர்தல் பணியால், தே.ஜ., கூட்டணியை சேர்ந்த பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் கரையேறுவாரா? என்பது வரும் மே 4ம் தேதி தெரிய வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us