/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்யப்படுமா? :கலந்தாய்வை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்யப்படுமா? :கலந்தாய்வை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்யப்படுமா? :கலந்தாய்வை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்யப்படுமா? :கலந்தாய்வை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 17, 2024 02:52 AM

புதுச்சேரி, ஆக. 17- மருத்துவ கவுன்சில் மாநிலங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டுள்ள சூழ்நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை புதுச்சேரி அரசு விரைவாக இறுதி செய்து, சென்டாக் மருத்துவ கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப் படையிலான சேர்க்கை படிப்புகளுக்கு சென்டாக் வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடத் திற்கு 1,467 பேர், நிர்வாக இடங்களுக்கு 4,088 பேரும், கிறிஸ்துவ சிறு பான்மையினர் இடங்களுக்கு 15 பேரும், தெலுங்கு பேசும் சிறுபான்மையினர் 13 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
என்.ஆர்.ஐ., ஓ.சி.ஐ., பாரின் நேஷனல், என்.ஆர்.ஐ., ஸ்பான்ஸ்சர்டு - 201 பேரும், விளையாட்டு பிரிவில் 65 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
வரும் 20ம் தேதி வரை இந்த வரைவு பட்டியல் குறித்த ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில் முதற்கட்ட கவுன்சிலிங்கை, அகில இந்திய இட ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக் கழகங்கள் ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் கலந்தாய்வினை முடிக்க வேண்டும். கல்லுாரி இணைந்த மாணவர்கள் பட்டியலை ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் பரிமாற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களை பொருத்தவரை ஆகஸ்ட் 21ம் தேதி துவங்கி 29ம் தேதிக்குள் முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வினை நடத்த வேண்டும். அத்துடன் கல்லுாரியில் இணைந்த மாணவர்களின் பட்டியலை செப்டம்பர் 6, 7 ஆகிய தேதிக்குள் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வினை நான்கு நாட்களில் புதுச்சேரி மாநிலத்தில் துவங்கப்பட வேண்டும். ஆனால் புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இதுவரை இறுதி செய்யப்படாமல் உள்ளது.
மருத்துவ கவுன்சிலிங்கிற்கான ஏற்பாடுகளை சென்டாக் இந்தாண்டு முன்கூட்டியே திட்டமிட்டு துவங்கியுள்ள போதிலும், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ளதால், கலந்தாய்விற்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
சீட் மேட்ரிக்ஸ் இன் னும் தயார் செய்யவில்லை. எனவே மருத்துவ கவுன்சில் சொல்லியுள்ள தேதி யில் முதற்கட்ட கலந்தாய்வு துவங்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் முடிந்தால் தான் மற்ற கவுன்சிலிங்கிற்கு வழி கிடைக்கும். இதனால் மற்ற படிப்புகளின் கலந்தாய்விற்கும் முட்டுகட்டை விழுந்துள்ளது.
எனவே விரைவாக அரசு ஒதுக்கீட்டு இடங்களை இறுதி செய்து, சென்டாக் மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்.