/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குற்றவாளிக்கு ஆஜராகமாட்டோம்: வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு
/
குற்றவாளிக்கு ஆஜராகமாட்டோம்: வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு
குற்றவாளிக்கு ஆஜராகமாட்டோம்: வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு
குற்றவாளிக்கு ஆஜராகமாட்டோம்: வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு
ADDED : மார் 07, 2024 04:06 AM
புதுச்சேரி : சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய கொடூர குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த இளம் சிறுமியின் கொடூர மரணத்திற்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில், காவல்துறையானது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த கொடுங் கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக புதுச்சேரியில் இருக்கின்ற வழக்கறிஞர் யாரும் ஆஜராக கூடாது என்று முடிவு எடுத்து உள்ளோம். மேலும் பாதிக்கப்பட்ட இளம் சிறுமி குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.