/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிமேடு போலீஸ் மைதானத்தில் பிளானட் பூங்கா சீரமைக்கப்படுமா?
/
கோரிமேடு போலீஸ் மைதானத்தில் பிளானட் பூங்கா சீரமைக்கப்படுமா?
கோரிமேடு போலீஸ் மைதானத்தில் பிளானட் பூங்கா சீரமைக்கப்படுமா?
கோரிமேடு போலீஸ் மைதானத்தில் பிளானட் பூங்கா சீரமைக்கப்படுமா?
ADDED : ஏப் 15, 2025 04:25 AM

புதுச்சேரி: கோரிமேடு போலீஸ் மைதானத்தில் இருக்கைகள் உடைந்து அலங்கோலமாக கிடக்கும் லிட்டில் பிளானட் பூங்காவை சீரமைக்க வேண்டும்.
கோரிமேடு போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் குடியிருக்கும் காவலர் குடும்பங்கள், குழந்தைகள் பொழுது போக்கும் வகையில் லிட்டில் பிளானட் பூங்கா கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் 22 ம்தேதி புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
அப்போதைய டி.ஜி.பி., கவுதம், அவரது மனைவி கிரண் கவுதம் திறந்து வைத்தனர். லிட்டில் பிளானட் பூங்காவில், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஆக்டோபஸ் மற்றும் ஒட்டகச்சிவிங்கி வடிவில் சறுக்கு மரம், சிறுவர் ராட்டினம், ஊஞ்சல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்கா தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக உள்ளது.
அனைத்து இருக்கைகள் உடைந்து அலங்கோலமாக கிடக்கின்றது. சிறுவர்களுடன் வரும் பெற்றோர் உட்கார இடமின்றி ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். பூங்காவில் சிறுவர்கள் உள்ளே சென்று விளையாட முடியாதவிற்கு மேடு பள்ளமாக மோசமான நிலையில் உள்ளது.
நச்சு பாம்புகள், விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்புவதற்கு அஞ்சுகின்றனர். இருக்கைகள் உடைந்து அலங்கோலமாக உள்ள லிட்டில் பிளானட் பூங்காவை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க போலீஸ் தலைமையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.