/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆரில் அதிகரிக்கும் விபத்துகள் சென்டர் மீடியன் உயரம் அதிகரிக்கப்படுமா?
/
இ.சி.ஆரில் அதிகரிக்கும் விபத்துகள் சென்டர் மீடியன் உயரம் அதிகரிக்கப்படுமா?
இ.சி.ஆரில் அதிகரிக்கும் விபத்துகள் சென்டர் மீடியன் உயரம் அதிகரிக்கப்படுமா?
இ.சி.ஆரில் அதிகரிக்கும் விபத்துகள் சென்டர் மீடியன் உயரம் அதிகரிக்கப்படுமா?
ADDED : செப் 07, 2025 11:09 PM

புதுச்சேரி: இ.சி.ஆரில் அதிகரிக்கும் விபத்துகளை குறைக்க சென்டர் மீடியன் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.
காலாப்பட்டு இ.சி.ஆரில் சாலை விபத்துகளை குறைக்க சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய இடை வெளியுடன் திட்டு திட்டாக அமைக்கப்பட்ட இந்த சென்டர் மீடியனால் சாலை விபத்துகள் அதிகரித்தன.
குறிப்பாக, இரவில் சென்டர் மீடியன் இருப்பது தெரியாமவில் வாகன ஓட்டிகள் தொடர் விபத்தில் சிக்கினர். இதனையடுத்து இடைவெளி விடப்பட்ட இடங்களில் அரை அடி உயர தடுப்பு கட்டைகள் கற்கள் வைத்து சமாளிக்கப்பட்டது.
ஆனால், இ.சி.ஆரில் புதிதாக சாலை போடப்பட்டுள்ள சூழ்நிலையில் பல இடங்களில் அரை அடி தடுப்பு கட்டைகள் உயரம் குறைந்துவிட்டது. சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் மீண்டும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலை சமமாக உள்ள தடுப்பு கட்டைகளில் வாகனங்கள் ஏறி இறங்கி விபத்தில் சிக்குகின்றன.
3 அடி உயர சென்டர் மீடியனும், அரை அடி உயர தடுப்பு கட்டை கற்களும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் கற்கள் சிதறி உருக்குலைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் முதல் மெயின் கேட் முதல் பிள்ளைச்சாவடி வரை தடுப்பு கட்டைகளில் உயரம் குறைவாக உள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
வாகன ஓட்டிகள் கூறுகையில், 'சிறிய உயரத்துடன் தடுப்பு கட்டைகள் இருப்பது இரவில் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியவில்லை. சிறிது கவனம் சிதறினாலும், தடுப்பு கட்டையில் உரசி சாலை விபத்துகள் நடந்து விடுகின்றன. எனவே தற்போது சாலையில் புதைந்துள்ள அரை அடி தடுப்பு கட்டை கல்லை முற்றிலும் அகற்றிவிட்டு, ஏற்கனவே போடப்பட்டுள்ள தடுப்பு கட்டைகள் போன்று 3 அடி உயரத்திற்கு சென்டர் மீடியன் ஏற்படுத்தினால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும்' என்றனர்.