தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிக்னல்களில் ரவுண்டானா சுற்றளவு குறைக்கப்படுமா? பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் தினசரி போராட்டம்

 சிக்னல்களில் ரவுண்டானா சுற்றளவு குறைக்கப்படுமா? பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் தினசரி போராட்டம்

 சிக்னல்களில் ரவுண்டானா சுற்றளவு குறைக்கப்படுமா? பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் தினசரி போராட்டம்


ADDED : ஜன 30, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திரா, ராஜிவ் சிக்னல்களில் ரவுண்டானாக்களின் சுற்றளவை குறைத்தால் மட்டுமேநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

புதுச்சேரியில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தவையாக இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்கள் உள்ளன.

விழுப்புரம், கடலுார் போன்ற ஊர்களில் இருந்து வரும் வாகனங்களும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வரும் வாகனங் களும் இந்த சிக்னல் களை கடந்தே செல்ல வேண்டும்.

இந்திரா சிலை சிக்னல் வழியாக விழுப்புரம், கடலுார், புதுச்சேரி பஸ் நிலையம், சென்னை மார்க்க வாகனங்கள் கடந்து செல்லும் 4 பிரதான சாலைகள் இணைகின்றன. ராஜிவ் சிலை சிக்னல் வழியாக கடலுார் மார்க்கம், இ.சி.ஆர்., கோரிமேடு, வழுதாவூர், புதுச்சேரி நகர பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கடந்து செல்லும் 5 பிரதான சாலைகளும் சந்திக்கின்றன.

சிக்கல் இந்திரா சிலையை சுற்றிலும் நீரூற்று, சிறிய பூங்காவுடன் 22.86 மீட்டர் சுற்றளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதேபோல் ராஜிவ் சிலையை சுற்றி சிறிய பூங்காவுடன் 19.14 மீட்டர் சுற்றளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதிக போக்குவரத்து இல்லாத அந்த கால கட்டத்தில் வாகன நெரிசல், விபத்து உள்ளிட்ட பிரச்னைகள் எழவில்லை. ஆனால் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதால் இரண்டு ரவுண்டானாக்களிலும் போக்குவரத்து பிரச்னை எழுந்துள்ளது.

அணிவகுக்கும் வாகனங்கள் தினமும் போக்குவரத்து நெரிசல் இந்த இரண்டு சிக்னல்களில் உச்சக்கட்டமாக உள்ளது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றன.

ரவுண்டானா பெரிய அளவில் இருப்பதால் ஒரு திசையில் இருந்து, மற்றொரு திசைக்கு வாகனங்கள் கடந்து செல்லும் போது, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதற்கு, எதிர் திசையில் இருந்தும், பக்கவாட்டில் இருந்தும் வரும் வாகனங்கள் சரியாக தெரியாதது தான் காரணம். இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.

விபத்துக்களில் சிக்கி பலர் பலியாவதும், ஏராளமானோர் தினசரி காயமடைவதும் வாடிக்கையாகி விட்டது.

வசைபாடும் மக்கள் இந்த சிக்னலை கடக்கும் பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் இந்த ரவுண்டானாக்களையும், சிலைகளையும் திட்டிக்கொண்டே செல்கின்றனர். இதே வழியாக தான் அதிகாரிகள் தினமும் சென்று வருகின்றனர்.

மக்களின் கஷ்டம் இவர்களின் கண்ணுக்கு தெரியவில்லையா என கடும் அதிருப்தியில் கேள்வி எழுப்பியப்படி செல்கின்றனர்.

கடந்த 1.9.1993ல் இந்திரா சிலை சிக்னல் கவர்னர் சென்னாரெட்டி, முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் முன்னிலையில் பிரதமர் நரசிம்ம ராவ் திறந்து வைத்தார்.

இந்திரா சிக்கனல் அமைக்கப்பட்டபோது, அப்போதைய புதுச்சேரி பிராந்தியத்தின் மக்கள் தொகை 7 லட்சமாக இருந்தது. மொத்தமே 1.90 லட்சம் வாகனங்கள் தான் ஓடின. அதை தொடர்ந்து கடந்த 16.3.1996ல் ராஜிவ் சிலை சிக்னல் எஸ்.பி., சவான் திறந்து வைத்தார்.

16 லட்சம் வாகனங்கள் ராஜிவ் சிக்னல் அமைத்தபோது, புதுச்சேரியின் மக்கள் தொகை 8.5 லட்சமாக இருந்தது. அப்போது கூட 2.10 லட்சம் வாகனங்கள் தான் புதுச்சேரியில் ஓடின.

ஆனால் இப்போது அப்படி அல்ல. புதுச்சேரியில் மக்கள் தொகை 16 லட்சமாக உள்ளது. அதற்கு இணையாக புதுச்சேரியில் 16 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. பைக்குகள் மட்டுமே 9.5 லட்சம் பைக்குகள் ஓடுகின்றன. இப்படி மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்கள் அதிகரித்துள்ளபோது ரவுண்டானாக்களின் சுற்றளவை குறைந்தால் மட்டுமே இந்த சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

அரசியல் கூடாது ரவுண்டானா விஷயத்தில், கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. தலைவர்களின் சிலைகளை சுற்றியுள்ள ரண்டானாக்களின் சுற்றளவை தான் பொதுமக்கள் குறைக்க சொல்கின்றனர். தலைவர்களின் சிலைகளை முழுமையாக அகற்றச் சொல்ல வில்லை.

எனவே மக்களின் நலன் கருதி ரவுண்டானாக்களின் சுற்றளவை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, அனைத்து அரசியல் கட்சி களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us